கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர் மரணம்! பீதியில் திருவல்லிக்கேணி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
corono-dead-body-2
corono-dead-body-2

சென்னை திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த 39 வயதுடையவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்திருக்கிறார். அவரது சடலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

கொரோனா முதல் அலையில் இதே வி.ஆர்.பிள்ளை தெருவில் 150க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இரண்டாம் அலையில் வீட்டு தனிமையில் ஒருவர் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.