அஞ்சல் துறையில் வேலை!

சற்றுமுன் தமிழகம் வேலைவாய்ப்பு
post office
post office

இந்திய அஞ்சல் துறை பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver ஆகிய பணியிடங்களில் மொத்தம் 35 இடங்கள் காலியாக உள்ளன.

இதில் டிரைவர் பதவிக்கு மட்டும் 25 இடங்கள் காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

டிரைவர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2021 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்படும்.

முழு விவரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை- 600 006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.