
மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்தது கொணடாா்.
திருவையாறு அடுத்துள்ள தில்லைஸ்தானம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்.
இவர் தஞ்சையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது உடன் பிறந்த அக்காவின் மகளான நதியாவுடன் (வயது 20) சசிகுமாருக்கு திருமணம் நடந்துள்ளது.
ஆனால் நதியாவுக்கு சசிகுமாரை பிடிக்காமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக தாய்மாமாவை திருமணம் செய்ய சம்மதித்தாக கூறப்படுகிறது.
இதனால் மனம் வெறுத்து போன நதியா மிகுந்த மனஉளச்சலில் இருந்து வந்துள்ளார்
மேலும் சரிவர சாப்பிடாமலும் கவலையுடன் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரது அக்கம் பக்கம் வீட்டில் வசித்தவா்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.
மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்துள்ளார்
.
இது குறித்து நதியாவின் தாய் ஓலத்தேவராயன்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா மருவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து வந்துள்ளார்.
மேலும் திருமணம் முடிந்து 3 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் தஞ்சை ஆர்டிஓ விசாரணை செய்து வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



