14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai - 2026

குளித்தலை அருகே 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கொத்தனார் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குளித்தலை அருகே உள்ள அய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். 23 வயது நிரம்பிய இவர் கொத்தனார் வேலை செய்துவந்துள்ளார்.

இவர் 14 வயதான சிறுமி ஒருவரை காதலித்து, அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். 7 மாத கர்ப்பிணியான நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அச்சிறுமி சக்திவேலிடம் கேட்டார்.

ஆனால் அவர் அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்ளாமல் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு
செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.