இந்த லிங்க் கிளிக் பண்ணாதீங்க.. சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published:

whatsapp
whatsapp

வாட்ஸப்பில் வரும் அமுல் ஆண்டுவிழா 6,000 ரூபாய் பரிசு எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

வாட்ஸப் பயனர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று என்னவென்றால் அவ்வப்போது வாட்ஸ் அப்பில் ஏதேனும் லிங்க் நமது நண்பர்கள் மூலமாக நமக்கு அனுப்பப்பட்டு கொண்டே இருக்கும். இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு பரிசு தொகை காத்திருக்கிறது. இதை கிளிக் செய்யுங்கள் என்று இருக்கும்.

தற்போதும் கடந்த சில நாட்களாக அமுல் தனது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக பரிசு தொகை ஒன்றை வழங்குவதாகவும், இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள் எனவும் ஒரு லிங்க் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

hacker
hacker

இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றதும் நமக்கு பரிட்சயமான அமுல் எனும் நிறுவனத்தின் பெயர் கொடுக்கப்படுகிறது. முதலில் ஒரு டைம் கொடுக்கப்படுகிறது.

அதன் பின்பாக லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றவர்கள் வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் கிளிக் செய்யவேண்டும் எனக் கூறுகிறது. இறுதியாக நீங்கள் 6,000 ரூபாய் பரிசுத் தொகை வென்றுளீர்கள். இதை நீங்கள் பெற வேண்டுமானால் 5 வாட்ஸ் குழுக்கள் அல்லது 20 வாட்ஸ்அப் நண்பர்களுடன் இந்த லிங்கை பகிர்ந்து கொள்ளுங்கள் என கேட்கப்படுகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதை நாம் நம்புவதற்க்காக சிலர் உண்மையில் தாங்கள் இந்த பரிசு தொகையை பெற்றது போல கருத்து பதிவிட்டு இருப்பார்கள்.

இதை நமது நண்பர்கள் நமக்கும் அனுப்பியிருப்பார்கள். நாமும் பிறருக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் இனி அவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால் இது அமுல் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட கூடிய லிங்கே கிடையாது. இது ஒரு போலியான லிங்க்,

இந்த லிங்கை அனுப்பி பரிசுத்தொகை வழங்குவதாக கூறுவது அனைத்தும் ஹேக்கர்களின் செயல் என இந்திய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கூறுகின்றனர்.

msg 3
msg 3

வாட்ஸப் உபயோகப்படுத்த கூடியவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றதும், அவர்கள் ஒரு லிங்க் நமக்கு கொடுப்பார்கள்.

அதன் மூலமாக நமது வாட்ஸ்அப்பில் வரக்கூடிய தகவல்களை அவர்கள் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக நம்மிடமிருந்து பணமோசடி செய்யப்படக் கூடிய வாய்ப்புகளும், நமது தனிப்பட்ட உரிமைகள் பகிரப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு வரக்கூடிய லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்வதை முதலில் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img