இணையத்தில் இதைப் பகிராதீர்கள்! எச்சரிக்கும் காவல்துறை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் தொழில்நுட்பம்
hackers
hackers

முகம் அறியாத நபர்கள் படிவமாகவோ அல்லது Link மூலமாகவோ உங்களை பற்றிய தகவல்களை பூர்த்தி செய்யுமாறு கூறினால் கவனமாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்.

இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

அதன்மூலம் ஒருவகையில் மக்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மற்றொருபுறம் ஆபத்தான செயல்களும் அதன்மூலம் நிகழ்கின்றன.

அதன்படி தற்பொழுது இணையதளம் மூலம் பெரும்பாலான குற்றங்கள் நிகழ்கின்றன பண மோசடி செய்யும் கும்பல் தற்பொழுது இணையதளத்தின் மூலமும் பணத்தை கொள்ளையடிக்க துவங்கிவிட்டனர்.

மேலும் சமூக வலைதளங்களின் மூலம் புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம் உங்களுடைய தகவல்களை பூர்த்தி செய்யுமாறு என்று கூறி தற்பொழுது அதன் மூலமும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் லிங்க் மூலம் அல்லது படிவம் மூலம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை துணை கமிஷனர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆராய்ச்சி மற்றும் புள்ளி விபரங்கள் சேகரிப்பதாக காரணம் கூறி முகம் தெரியாத நபர்கள் ஒரு படிவமாகவோ அல்லது உங்களுக்கு லிங்க மூலமாகவோ உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் பூர்த்தி செய்யுமாறு கூறினால் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுடைய தொலைபேசி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கேட்பவர்கள் மோசடி செய்யும் நபர்களாக கூட இருக்கலாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.