
IDBI வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Manager Grade ‘A’ பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட PGDBF என்ற Course நடத்த உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
அதில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவோருக்கு அவ்வங்கியின் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் பணிவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் – IDBI Bank
பணியின் பெயர் – Assistant Manager Grade ‘A’
பணியிடங்கள் – 650
கடைசி தேதி – 10.08.2021 – 22.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் :
Assistant Manager Grade ‘A’ பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 650 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
வங்கி கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இந்த ஆன்லைன் தேர்வுகள் வரும் 04.09.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
SC / ST / PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்று முதல் 22.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Official PDF Notification – https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisment-PGDBF-2021-22.pdf
Apply Online – https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx