3 நிமிடத்தில் 50 குறள்! பள்ளி மாணவி சாதனை!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கல்வி கோவை சற்றுமுன்
sivadharshini
sivadharshini

கோவையில் 3 நிமிடம் 10 விநாடிகளில் 50 குறளை ஒப்பித்து சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு, மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி – பாலமகேஷ்வரி தம்பதியினரின் மகள் சிவதர்ஷினி. இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இஇளம் வயது முதலே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்ட மாணவி சிவதர்ஷினி, 3 நிமிடம் 10 விநாடிகளில் திருக்குறளில் 5 அதிகாரங்களில் உள்ள 50 பாடல்களை ஒப்பித்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதனை அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இன்று மாணவி சிவதர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய மாணவி சிவ தர்ஷினி, தனக்கு சிறு வயது முதலே தமிழில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததாகவும், இதற்காக 50 திருக்குறள்களை வேகமாக ஒப்பிக்க பயிற்சி எடுத்து வந்ததாகவும் கூறினார்.

2 நிமிடம் 30 விநாடிகளில் இதனை ஒப்பிக்க முடியும் என்ற போதும், தமிழுக்கு தெளிவும் உச்சரிப்பும் முக்கியம் என்பதால் 3 நிமிடம் 10 விநாடிகளில் திருக்குறளை ஒப்பிவித்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததாக கூறினார்.

மேலும், திருக்குறளில் உள்ள ஆயிரத்து 330 குறள்களையும் ஒரு மணிநேரத்தில் ஒப்பிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் மாணவி சிவதர்ஷினி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.