பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனலில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக்கை திருடன் என்றார். இதனால் கோபமடைந்த நீமுல் ஹக், மந்திரியை கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் நபீசா ஷா, மற்றொரு சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சியும் பாதியில் முடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு இவர் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜமீல் எஸ்.காம்ரோ மீது தண்ணீர் டம்ளரை வீசியுள்ளார்.



