இந்திய வீரர்கள் மற்ற டி20 லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மற்ற டி20 லீக்கில் ஆடினால் சர்வதேச அளவிற்கான அனுபவத்தை பெற முடியும்’’ என்றார்.
இந்தியாவில் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ், வெஸ்ட் இண்டீஸ்சில் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தில் வங்கதேசம் பிரீமியர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



