ஈராக்கின் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் உசேனினுக்காக பாஸ்ராஹ் ப்ரீஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 30 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சொகுசு படகை, கடற்படையினருக்கான ஹோட்டலாக மாற்ற ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 1981 ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆடம்பர படகில் இதுவரை சதாம் உசேன் கால் வைத்ததில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படகில் ஒரு பிரெசிடென்ட்டல் சுட் மற்றும் 17 கெஸ்ட் ரூம்கள், ஒரு கிளினிக் மற்றும் 18 கேபின்கள் இடம் பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படகை, பஸ்ரா பல்கலைக்கழக கடல் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




What will be the fate of 150 crores bungalow of Mayawathi ??