
மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பு சார்பில்
அனுஷத்தை முன்னிட்டு எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் ஆழ்வார்களை ஆராதிப்போம் என்ற தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசியதாவது:
இறைவனை தங்கள் பக்தியால் ஆட்சி செய்தவர்கள் ஆழ்வார்கள். மார்கழி மாத வேளைகளில் நாம் ஆழ்வார் பெருமக்களை நினைப்பதும் வணங்குவதும் நம்மை பெரிதும் அருளுக்கு ஆளாக்கிவிடும்.
உற்ற குருவை இறுக்கமாக பிடித்துக்கொண்டு விட்டால் அவர் நம்மை இறைவனிடம் சேர்த்து விடுவார்கள் பக்திக்கு தேவை பணம் அல்ல பணிவுதான் என்று பேசினார்.
நிகழ்ச்சியை அனுஷத்தின் அனுகிரஹத்தின் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.