ஆரோக்கிய சமையல்: வரகு தேங்காய் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varaku coconut rice
varaku coconut rice

வரகு தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:
வரகு – 200 கிராம்,
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன்,
உளுந்து, கடலைப்பருப்பு – தலா 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வரகை 15 நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்துகொள்ளவும். ஒரு பங்கு வரகுக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பிறகு வெந்த வரகை ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்தால் வரகு தேங்காய் சாதம் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.