என் மீது (விழும் வகையில்) யாரும் கரன்ஸிகளை வீச(விட)வில்லை!

Published:

thirumavalavan london - 2026

லண்டனில் என் மீது யாரும் கரன்ஸிகளை வீசவில்லை என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

இதற்கு பதிலளித்துள்ள டிவிட்டர்வாசி ஒருவர், வீசிய கரன்சியெல்லாம் பக்கத்தில் நின்றவர்கள் பொறுக்கிக் கொண்டார்கள்.. என் மீது விழுந்திருந்தால் நான் பொறுக்கிட்டு வந்திருப்பேன்.. (திருமாமாவளவன்…) என்று கூறுவதாக இதனை விமர்சித்திருக்கிறார்.

https://twitter.com/itz_katti/status/1166642671194185729

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் லண்டன் சென்றிருந்த போது அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஈழத் தமிழர் ஒருவர் திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்தும், இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் திமுக உடன் கூட்டணி வைத்தது பணத்திற்காகவும் பதவிக்காகவும் என்று கடுமையாகப் பேசியும், பணம் தான் உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என பணத்தை அவர் மீது வீசி எறிந்ததாகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து விளக்கமளித்த திருமாவளவன், என் மீது யாரும் கரன்சியை வீசி எறியவில்லை, லண்டனில் கடைசி இருக்கையில் இருந்தவர் திமுக கூட்டணியில் இடம் பெற்றது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் அப்புறப் படுத்தப் பட்டு விட்டார் என்று கூறினார்.

திமுக., கூட்டணியில் இடம் பெற்றது ஏன் என்று கேட்டதால் அவர் அப்புறப் படுத்தப் பட்டு விட்டதும், அதன் பின்னர் பேசிய திருமாவளவன், விடுதலைப் புலிகள் தலைவரே என்னை திமுக., காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுமாறு கூறினார் என்றும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டதும், இப்போது திருமாவளவன் மீது இலங்கைத் தமிழ் உலகம் சிரிப்பாய்ச் சிரிக்கக் காரணமாகிவிட்டது!

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img