ஹலோ… முதல்வர் வாழப்பாடி சார்… நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

Published:

stalin meme2 - 2026

ஹலோ… முதல்வர் வாழப்பாடி சார்… நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

இப்படித்தான் டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் ஸ்டாலினை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வதாக வந்த செய்தியை அடுத்து, அந்த நாள் முதலே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்தைச் செய்து வருகிறார். அதற்கு பதில் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறாரே… அது எதனால் என்ற ரகசியத்தைச் சொல்வாரா என்று கேட்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் நாற்காலி மீது ஒரு கண் வைத்துக் கொண்டு, முட்டி மோதிப் பாத்தும், என்னவெல்லாமோ அரசியல் செய்தும், தமிழக அரசை அசைக்க முடியவில்லை ஸ்டாலினால்!

போதாக்குறைக்கு, தம் தந்தை மு.கருணாநிதி காலமான போது, அந்த ஆறடி நிலத்துக்காக அரசிடம் அலையோ அலை என்று அலைந்தார்! மரபுகளை மீறி எடப்பாடி பழனிசாமி கொடுத்த காரணத்தால் இன்று மெரினா பீச்சுக்குப் போய், பகுத்தறிவின்பாற்பட்டு, சமாதி வழிபாடு செய்து வருகிறார் ஸ்டாலின். இப்படி முதல்வர் நாற்காலிக்காக இலவு காத்த கிளியாக ஸ்டாலின் காத்திருப்பதை கேலி செய்து வருகின்றனர் டிவிட்டர் சமூகத் தளத்தில்!

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

முன்னர் எம்.ஜி.ஆர்., உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வெளிநாடு சென்றபோது, முதல்வர் பதவியை என்னிடம் ஒப்படையுங்கள்; நீங்கள் திரும்பி வந்ததும் பத்திரமாக ஒப்படைக்கிறேன் என்று கெஞ்சி கேவலப் பட்ட மு.கருணாநிதியைப் போல், இப்போது மு.க.ஸ்டாலினும் சொல்வார் என்று நகைச்சுவை மீம்ஸ்கள் உலா வருகின்றன.

https://twitter.com/ModernBuddhan/status/1166610390798819329
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img