அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மூக்கில் நீர் வடிதல், மூலம், மூக்கடைப்பு, முள் தைப்பு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

மூக்கில் நீர் வடிகிறதா?

மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து. நீர் விட்டு பாகுபதமாக காய்ச்சி சிறிது நெய் விட்டு இறக்கி கிளறி வைத்துக் கொண்டு அந்த லேகியத்தில் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஐந்து கிரெயின் அளவு சாப்பிட்டு வர மூக்கிலிருந்து நீர் வடிதல் நின்று விடும்.

முள் தைத்து விட்டதா?

காலில் முள் குத்தி அது ஒடித்துக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டால் அந்த இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து வரலாம் அல்லது எள்ளை அரைத்து அந்த இடத்தில் வைத்துக் கட்டி அதன் மீது நல்லெண் ணெய் விட்டு வரலாம். முள் மக்கி தானாகவே வெளி வந்து விடும் சீழ் பிடிக்காது.

மூக்கடைப்பு சரியாக…

துளசி இலையையும், வில்வ இலையையும் தனித்தனியே சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சி தவைக்கு தேய்த்து வந்தால் மூக்கடைப்பு வரவே வராது.

மூல வியாதிக்கு…

எட்டு விதமான மூல வியாதி உண்டு. எல்லாவற்றிற்கும் பொதுவான மருத்துவம். வேப்பமரத்தின் விதைகளைக் கொண்டு வந்து உள்ளிருக்கும் பருப்பை மட்டும் மை போல் அரைத்து காலையிலும்

மாலையிலும் பாக்களவு வெந்நீரில் 40 நாள்கள் குடித்து வர பூரண குணம் தெரியும்.

மணத்தக்காளிக் கீரையுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர- இரத்த மூலம் குணமாகும்.

முறைக் காய்ச்சல் சரியாக…

அரைப்பிடியளவு இலந்தை இலையை சுத்தம் செய்து 15 மிளகும் வெள்ளைப் பூண்டில் பாதியளவும் அரைத்து காலை, மாலை ஒரு நாள் சாப்பிட்டால் போதும். ஆனால், அன்று உணவில் புளி சேர்க்கக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.