லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நெய் ரைஸ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
ghee rice - 2026

நெய் ரைஸ்
தேவையான பொருட்கள்
நெய் – விருப்பமான அளவு (கொஞ்சம் அதிகமாவே தேவை )
பாஸ்மதி ரைஸ் – ஒரு டம்ளர் (15 நிமிடம் ஊற வைக்கவும்.)
பால் – 2 டம்ளர் (ஆவின் பால்)
பச்சை பட்டாணி – 100 கிராம்
மீல்மேக்கர் -100 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு -3 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி – கொஞ்சம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
பச்சை கொத்தமல்லி – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
பட்டை – 2
கிராம்பு – 2
பிரிஞ்சி இலை – 1
ஏலக்காய் – 1

செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் 2 டம்ளர் பாலை சேர்க்கவும். பின் பட்டாணி, மீல் மேக்கர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

அடுத்து பாஸ்மதி அரிசி சேர்த்து நன்றாக கிளறவும். நெய் கொஞ்சம் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் நிறுத்தவும். சூடான சுவையான நெய் சோறு தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.