ஒப்போ, ரியல் மீ, விவோ மற்றும் சாம்சங் என எந்த ஆண்ட்ராய்டு தொலைபேசி பயனர்களாக இருந்தாலும், மொபைல் ஃபோனின் மொபைல் இண்டெர்நெட் டேட்டா விரைவாக காலியாவதாக அடிக்கடி புகார் கூறுகிறார்கள்.
உண்மையில், ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் (Background Apps) அதிக இணையத் தரவைப் பயன்படுத்துகின்றன. இந்த வகையில் பின்னணி பயன்பாடுகள் 24 மணி நேரத்தில் சுமார் 40 சதவிகிதத்தை மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றன.
நாம் ஸ்மார்ட்போன்களில் செயலிகளை பயன்படுத்தும்போது, Home or Back பட்டனை அழுத்துவதன் மூலம் அவற்றை திரையில் இருந்து அகற்றுகிறோம்.
ஆனால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல், பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும். மேலும், நாம் மொபைல் தரவு, பேட்டரி மற்றும் இருப்பிடம் (location) குறித்த தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.
பொதுவாக, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பிரவுசர்களை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அவற்றில் அதிக நேரத்தையும் செலவிடுகிறோம்.
அத்தகைய சூழ்நிலையில், அவற்றை திரையில் இருந்து அகற்றும்போது, இந்த பயன்பாடுகள் முழுமையாக அகற்றப்படாமல், பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஸ்மார்ட்போன் திரையின் அடிப்பகுதியில் மூன்று விருப்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று Back button, Home button மற்றும் மூன்றாவது விருப்பம் திரையில் இல்லாத ஆனால் பின்னணியில் இயங்கும் அனைத்து பயன்பாடுகளையும் பார்க்க அனுமதிக்கிறது.
எப்படி தவிர்ப்பது..?
Whatsapp settings-ல், வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோவை தானாக பதிவிறக்குவதற்கான விருப்பத்தை நீங்கள் ஆஃப் செய்ய வேண்டும்.
மொபைல் தொலைபேசியில் செயலிகளின் auto update-ஐ ஆஃப் செய்ய வேண்டும். தொலைபேசியில் உள்ள அத்தியாவசியமற்ற செயலிகளை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்..