‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்!

Actress Anu Siddhara - 2026

செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..  சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். 
பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப் பதிவாளருமான செழியன்  ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..

அமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.  இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்த படக்குழுவினர் அதற்கு சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் கூறுகிறார்… அதற்கு காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாரா தான்.. 

ameera movie - 2026

மலையாளத்தில் மம்முட்டியுடன்  இரண்டு, திலீப்புடன் ஒன்று  என வெற்றிப்படங்களில் நடித்து அங்கு பரபரப்பான நாயகியாகியுள்ளார். 
மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர்.. தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமானவரை ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

மொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் வயிற்றில் தனது இயல்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நடிப்பால் பால் வார்த்திருக்கிறார் அனு சித்தாரா. இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் “கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்” என குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர்.
 இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் கிளைமாக்ஸும் படமாக்கப்பட வேண்டியதுதான் பாக்கி.. 

இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான வெற்றிக்குமரன்.  படம் தென்காசி,  சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories