வீட்டு அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு காண்பது நல்லதல்ல.
பூனை வலமிருந்து இடமாக செல்வது அபசகுனம் ஆகும்.
பூனை இடமிருந்து வலமாக செல்வது போல கனவு வந்தால் வேலை தாமதம் ஆகும்.
பூனை இறந்துவிட்டது போல கனவு வந்தால் வழக்குகள் வெற்றி அடையும்.
கனவு பலன் வீட்டு விலங்குகள்
பொதுவாக பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.
ஆடுகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. இது கனவு கண்டவருக்கு தனவிருத்தியை உண்டாக்கும்.
ஆட்டு கூட்டத்தை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.
ஆடு நம்மை பார்த்து கத்தினால் நல்ல செய்தி வரும்.
செம்மரி ஆட்டை கனவில் கண்டால் செல்வம் மேலும் பெருகும்.
ஆட்டை கோயிலில் பலியிடுவது போல கனவு வந்தால் நம்முடைய வேண்டுதல்கள் பலிக்கும்.