அழகை அள்ளித்தெளித்த ஆறு! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா
river
river

ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குள் அடங்கி விடாமல் ஆச்சரியம் தரும் அழகை தன்னுள் புதைத்திருக்கிறது.

315 கி.மீ நீளம் கொண்டுள்ள இந்த நதியானது கிழக்கு இமயமலைகளில் உருவாகி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே பயணித்து, வங்கதேசத்திற்குள் நுழைகிறது. 12,370 சதுரை கிமீ பாசனத்திற்கு உதவும் இந்த நதியானது இறுதியாக வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

இரண்டு மலைகளை இணைக்கும் ஒரு பாலம், அதன் கீழே அமைதியாக வெகு தூரம் பயணித்து பார்வைக்கு அப்பால் எங்கோ சென்று மறைந்துவிடுகிறது அந்த நதி. பார்க்கவே அச்சத்தையும் பிரம்மிப்பையும் சேர்த்து தரும் அந்த வீடியோவை கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.