வரதட்சணை வாங்க மாட்டேன்.. கையெழுத்துப் போட்டால் பட்டதாரி சான்றிதழ்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
marriage-1
marriage-1

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையின் காரணமாக அடுத்தடுத்து திருமணமான இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வரதட்சணை யாரும் வாங்க கூடாது, கொடுக்கவும் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் புதிய விதிமுறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரதட்சணை வாங்கமாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் மாணவர்களுக்கு பட்டதாரி சான்றிதழ் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் வரதட்சணை வாங்குவதாக புகார்கள் எழுந்தால் பட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.