கண்ணில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து பரிசோதிக்கும் மருத்துவர்! கிண்டலடிக்கும் நாலட்ஜ் இல்லாத நபர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
dr
dr

கண்ணில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து ஒரு டாக்டர் செக் செய்யும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் கண்களில் ஸ்தெஸ்கோப்பை வைத்து பார்க்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் இந்த மருத்துவர் நீட்டில் தேர்ச்சி பெற்ற வடநாட்டுகாரர் என்று கூறிவருகின்றனர்.

இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால் சாதாரணமாக ஸ்டெதஸ்கோப்பை வைத்து நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். ஆனால் இவர் வித்தியாசமாக கண்களில் ஸ்டேட்டஸ் கோப்பை வைத்து பரிசோதனை செய்தால் சரியாக படிக்காத போலி டாக்டர் என்ற ரீதியில் ஒருசிலர் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் நோயாளிகளின் கண்களில் மருத்துவர்கள் ஸ்ததஸ்கோப்பை பார்க்கும் முறை ஒன்று உள்ளது. அதற்கு பெயர் ஆர்பிடல் அஸ்காலேஷன் என்பதாகும். உடல் நிலை கோளாறுகளுக்கு ரத்த நாளத்தில் மாறுபாடு ஏற்படும்.

அந்த மாறுபாட்டை ரத்த ஓட்டத்தின் மூலம் கண்டறியலாம். இதற்காக ஸ்டெதஸ்கோப்பை ரத்த நாளங்களுக்கு மிக அருகில் வைக்கும் போது அந்த நுட்பமான சத்தத்தை நம்மால் கேட்க முடியும்.

அப்படி ரத்த நாளங்களுக்கு மிக அருகிலிருக்கும் உடலுறுப்பு கண்தான். அதனால்தான் சில மருத்துவர்கள் கண்களை மூட வைத்து அவர்களது கண்களில் ஸ்தெஸ்கோப்பை வைத்து பார்ப்பார்கள்.

இது சில நோய்க்கான அறிகுறியாக மருத்துவர்கள் கருதுவர். இது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சோதனை,

இதை தெரியாமல் பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர். நீட் தேர்வின் அவசியத்தையும் அதனைக் குறித்து போதிய அறிவின்மையும் ஒரு சார்பாக கட்சியைப் பிடித்து ஜால்ரா தட்டும் நபர்களும் தான் இது போன்ற அறிவிலி கருத்துக்களை கூற முடியும். மக்களுக்கு நல்லது பயக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் மக்களை சென்றடைய விடாமல் கட்சியின் பாற்பட்டு விமர்சித்து குற்றம் கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களுக்கு உண்மை அறிவு ஒரு போதும் துலங்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.