
அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துவிட்டது.
Google Pay, Paytm, UPI, PhonePe போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்துகின்றனர். இண்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே இந்த முறையில் பணம் செலுத்த முடியும் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் பணம் செலுத்துவதற்கு ஆஃப்லைன் பயன்முறையும் உள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஆம். Google Pay, Paytm, UPI மற்றும் PhonePe ஆகிய செயலிகளில் இண்டர்நெட் வசதி இல்லாமலே நீங்கள் பணம் அனுப்பலாம். அதற்கு, உங்கள் அலைபேசியை முன்பே பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.
இந்தியாவில் கடந்த 2012 நவம்பர் மாதம், இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஸ்மார்ட்போன் அல்லாத பயனர்கள் உட்பட அனைத்து மொபைல் போன் பயனர்களுக்கும் *99# என்ற ஆஃப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியது.

பயனர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் *99# என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ஆஃப்லைன் முறையில் பணம் செலுத்தலாம். இருப்பினும், மொபைல் மூலம் UPI பேமெண்ட்களை செய்ய, பயனர்களின் மொபைல் எண் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், நீங்கள் சரியான சிம் கார்டு மற்றும் தொலைபேசி எண்ணை உங்கள் பொருத்தமான வங்கி கணக்குடன் இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
UPI பேமெண்ட்களை ஆஃப்லைன் முறையில் எப்படி செய்வது..?
உங்கள் தொலைபேசியின் டயல் பேடை திறந்து *99# ஐ அழைக்கவும்.
இது ஏழு விருப்பங்களைக் கொண்ட ஒரு புதிய மெனுவுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
Send Money’, ‘Receive Money’, ‘Check Balance’, ‘My Profile’, ‘Pending Requests’, ‘Transactions’ and ‘UPI PIN போன்ற விருப்பங்களை பட்டியல