வாட்ஸ்அப்: பெயர் பதியாத நபருடன் சாட்.. இந்த அம்சம் தெரியுமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
whatsapp
whatsapp

வாட்ஸ்அப்பில் “Click to chat” என்ற அம்சம் உள்ளது. இது உங்கள் தொலைபேசியின் அட்ரஸ் புத்தகத்தில் ஒருவரின் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அவர்களுடன் சாட் செய்ய உங்களுக்கு உதவும்.

குறிப்புகளைச் சேர்க்க அல்லது சில முக்கியமான தகவல்களைச் சேமிக்க உங்கள் சொந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணில் செய்தி அனுப்ப இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் தெரியாத நபருடன் அவர்களின் எண்ணைச் சேவ் செய்யாமல் சாட் அடிக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ள இந்த செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், வாட்ஸ்அப்பில் நபரின் தொலைபேசி எண் ஆக்டிவாக உள்ளது என்றால் மட்டுமே நீங்கள் சாட் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்க.

வாட்ஸ்அப்: நோட்ஸ் எடுக்க உங்களுக்கு நீங்களே எப்படி மெசேஜ் அனுப்புவது?
படி 1: முதலில் உங்கள் போனில் ஏதாவது ஒரு வெப் பிரவுசரை திறக்கவும். இதனை செய்வதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள்.

படி 2: இப்போது, ​​அட்ரஸ் பாரில் வெறுமனே “wa.me//” ஐ டைப் செய்து, அதன் பிறகு உங்கள் வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணையும் சேர்க்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதற்கு முன்பு நீங்கள் உங்கள் நாட்டின் குறியீட்டைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் அந்த மெசேஜிங் செயலி உங்கள் எண் தவறானது என்று சொல்லும். உதாரணமாக, இந்திய பயனர்கள் “wa.me//91XXXXXXXXXXX” என டைப் செய்யலாம்.

படி 3: நீங்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். மேலே உங்கள் தொலைபேசி எண்ணையும், Continue to chat” என்று ஒரு பெட்டியையும் காண்பீர்கள். நீங்கள் அந்த பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: வாட்ஸ்அப் உங்கள் அனைத்து சாட்களையும் காண்பிக்கும். எனவே, நீங்கள் உங்களுக்கே மெசேஜ் செய்யத் தொடங்கலாம் மற்றும் நீங்கள் செய்ய விரும்பும் குறிப்புகள் மற்றும் பிற விஷயங்களைச் சேர்க்கலாம்.

மொபைல் மற்றும் வாட்ஸ்அப் வெப் பதிப்புகளுக்கு இந்த செயல்முறை ஒன்று தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.