October 17, 2021, 12:07 am
More

  ARTICLE - SECTIONS

  குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்.. தமிழ் அர்த்ததத்துடன்!

  guruvayurappan - 1

  அனுதினமும் கீழ்க்காணும் குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகமான இந்த ஐந்து ஸ்லோகங்களைச் சொல்லி குருவாயூரப்பனை வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; நமது நல்ல விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

  கல்யாணரூபாய கலௌ ஜனானாம்
  கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
  கம்ப்வாதி திவ்யாயுதஸத்கராய…
  வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

  கருத்து: குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்களகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்களத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

  நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
  பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
  ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
  நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே

  கருத்து: நாராயணா… குருவாயூரப்பா… கோவிந்தா… முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்குபவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

  ப்ராஹ்மேமுஹூர்த்தே பரிதஸ்வபக்தை:
  ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
  ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே
  வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

  கருத்து: குருவாயூரப்பா… விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

  பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
  திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
  ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்
  ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே

  கருத்து: தங்கள் சந்நிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்றுகிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

  நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய:
  நித்யம் திவிஸ்த்தைர்நிஸிபூஜிதாய
  மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
  ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

  கருத்து: நித்யம் வேத வித்துக்களுக்கு அன்னம் அளிப்பவரும், நித்யம் தேவர்களால் இரவு பூஜிக்கப்படுகிறவரும், தாயான தேவகியாலும், பிதாவான வஸுதேவராலும், பக்தரான உத்தவராலும் பூஜிக்கப்பட்டவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

  (தேவகி, வஸுதேவர், உத்தவர்- இவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீபகவான் வைகுண்டம் போனதும், சமுத்திரத்தினால் துவாரகை மூழ்கியது. இந்த விக்ரஹம் மட்டும் சமுத்திரத்தின் அலையினால் மிதந்து மேற்கு சமுத்திரம் வந்து சேர்ந்தது. குருவும் (ப்ரஹஸ்பதியும்), வாயுவும் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்று பிரசித்திபெற்றது.)

  குருவாதபுரீஸ பஞ்சகாக்யம்
  ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
  ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து
  ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி:

  கருத்து: குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்களம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-