குசேலன் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்றபோது தனக்கு “இது வேண்டும், அது வேண்டும்” என்றெல்லாம் சொல்லவில்லை..ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான், “இதனால் கிருஷ்ண பரமாத்மா ஸந்தோஷமாகட்டும்” என்ற ஒரே எண்ணத்தில் கொடுத்தான்.
பகவான் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு ” தனக்கு திருப்தியாய்விட்டது” என்றார்..அதே ஸமயத்தில் குசேலன் குபேரனாகிவிட்டான்..
ஸர்வக்யனான பகவானிடம் நாம் ஒன்றும் கேட்கவேண்டியதில்லை, என்பதற்கு இது ஒன்று போதாதா..! அதனால் நாம் செய்யும் நல்ல காரியமோ பூஜையோ ப்ரசாரத்திற்காக அல்ல. அதனால் ஈசுவரன் திருப்தி அடைய வேண்டும்.
அதனால் தான் பீஷ்மர்
“யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா”
என்று கூறி, பக்தியினால் ஒருவன் பகவான் நாமத்தை ஜபித்தால், அதுவே பெரிய தர்மம், என்று சுட்டிக் காட்டினார்.