துர்க்கை அவதாரமாக பிறந்த கன்றுக்குட்டி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Calf
Calf

நாடு முழுவதும் நடக்கும் சில சம்பவங்கள் வினோதமாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கின்றன. இந்த நவராத்திரி சீசனில் பிறந்த இந்த கன்றுக்குட்டி அத்தகைய ஒரு வித்தியாசமான உதாரணமாக உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் கன்றுகுட்டி பிறந்தது.

நப்ரங்க்பூர் மாவட்டம் குமுளி பஞ்சாயத்தின் பிஜப்பூர் கிராமத்தை சேர்ந்த தனிராம் என்ற விவசாயிக்கு சொந்தமான பசுவிற்கு இந்த கன்றுக்குட்டி பிறந்துள்ளது..

2 தலைகள், 3 கண்களுடன் பிறந்த இந்த கன்றுக்குட்டி, விவசாயியும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கன்றுக்குட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..

தனிராமின் மகன் இதுகுறித்து பேசிய போது ” கன்றுக்குட்டி தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளது, எனவே நாம் வெளியில் இருந்து பால் வாங்கி அதற்கு உணவளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நவராத்திரியன்று தனித்துவமான கன்றுக்குட்டி பிறந்ததால், அப்பகுதியில் உள்ள மக்கள் மாட்டை துர்காவின் அவதாரமாக வழிபடத் தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.