ஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது!ஜெகன் அதிரடி!

Published:

jaganmohan - 2026

ஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜகன் மோஹன் ரெட்டி மீண்டுமொரு பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளார். ஏபிபிஎஸ்சி அதிகாரிகளுடனான மறுஆய்வுக் கூட்டத்தில் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறையை ரத்து செய்யும் முடிவை அவர் எடுத்துள்ளார் .

2020 ஜனவரி முதல் ரெக்ரூட்மென்ட் ஆகும் பணியாளர்களுக்கு இனி இன்டர்வியூ இருக்காது. எழுத்துத் தேர்வு நடத்தி மெரிட் தகுதியைக் கொண்டு வேலை வழங்க உள்ளார்கள்.

அதுமட்டுமன்றி வர இருக்கும் நாட்களில் ஏ பி பி எஸ் சி பணியிடங்களுக்கு ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையான முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் பணியிடங்களை நிரப்புவதில் காலெண்டர் தயார் செய்ய வேண்டும் என்றும் ஏ பி பி எஸ் சி நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் சிறப்பான கல்விக்கூடங்களான ஐஐஎம் ஐஐடி ..இவற்றின் உதவியை நாட வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஏ பி பி எஸ் சி வெளியிடும் ஒவ்வொரு நோட்டிபிகேஷனும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கிறதென்று அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். இனி எப்படிப்பட்ட தவறும் நிகழக் கூடாதென்றும் முக்கிய சேவைகளை அளித்து வரும் பிரிவுகளில் இருக்கும் பணியிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடுத்துரைத்தார்.

முதல்வர் ஜெகனின் உத்தரவுப்படி ஜனவரியில் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிதாக நோட்டிபிகேஷன் தயாரிப்பதில் எஏபிபிஎஸ்சி முனைந்துள்ளது. தற்போது இருந்தே காலியாக உள்ள பணியிடங்களை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளார்கள் அதிகாரிகள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img