
சக ஊழியர்கள் அளித்த வேதனையால் பிஹெச்இஎல் பணியாளர் நேஹா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
“இந்தக் கடிதத்தை சிவப்பு இங்கால் எழுது கிறேன் “என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நேஹா. அக்டோபர் 17 ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார் அவர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நேஹா ஹைதராபாதில் பிஹெச்இஎல் லில் வேலை பார்த்து வந்தார் . போபாலில் இருந்து பணி மாற்றம் வேண்டும் என்று கேட்டு வாங்கி ஹைதராபாத் வந்தார். தன் குடும்பத்தாரோடு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக தன் சக ஊழியர்கள் தனக்கு மன நெருக்கடி கொடுத்ததாகவும், அவர்கள் கடும் தொல்லை கொடுத்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போபாலிலும் அதேபோல் நடந்ததாகவும் தன் செல்போனை டாப் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனால்தான் பணிமாற்றம் செய்து இங்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர் இங்கும் அதே வேதனை தொடர்வதால் இந்த முடிவு எடுத்ததாக எழுதியுள்ளார்.
“ஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை. யாரிடமும் என் வேதனைகளை கூறிக் கொள்ள இயலவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொல்லை கொடுத்துவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். விமன் செல் மூலம் விழிப்பு உணர்வு முகாம் ஏற்பாடு செய்யப் போவதாக பிஹெச்இஎல் யூனியன் ஜெனரல் செக்ரடரி தாமோதர்ரெட்டி அறிவித்துள்ளார்.



