துபாயில் வசிக்கும் ஒரு தம்பதி கொடுத்த விருந்தில் புலியும் கலந்துக் கொண்டது. அநத விருந்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
துபாயில் வசிக்கும் ஒரு ஜோடி, பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவதற்காக விருந்து ஒன்றை கொடுத்தனர். இது வனவிலங்கு பிரியர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை கோபப்படுத்தியது.
வைரலான வீடியோவில், புலி துபாயில் உள்ள பூர்ஜ் அல்-அரபு ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடற்கரையில் புலி, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றுகிறது.
வீடியோவில் கடற்கரையில் உலா வரும் புலி, மணலில் புலி நடை போடுகிறது. மிதக்கும் பலூனின் அருகில் சென்று, கால்களை உயர்த்தி அதை உடைக்கும்போது அதிலிருந்து வண்ணப்பொடி கொட்டுகிறது.
பலூனில் இருந்து வெளிவந்த இளஞ்சிவப்பு பொடி, தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.
“புலிக்கு தீங்கு விளைவிக்கவில்லை, அங்கு கீழே விழுந்த பிளாஸ்டிக்கையும் அகற்றிவிட்டோம், கவலை வேண்டாம்” என்று வீடியோவுடன் எழுதப்பட்டிருந்தது.
பகிரப்பட்ட இந்த புலி வீடியோவை கார்லோட்டா காவல்லரி என்பவர் இரண்டு நாட்களில் பகிர்ந்து கொண்டார். ‘லோவின் துபாய்’ (‘Lovin Dubai’) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட பிறகு தான் இந்த வீடியோ வைரலானது.
தம்பதியரின் இந்த நடவடிக்கையை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதால், இந்த வீடியோவை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
“முற்றிலும் தவறான விஷயம். கம்பீரமான உயிரினங்களை, உங்கள் சுய விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம்!” என்று ஒருவர் கண்டிக்கிறார். மற்றொருவர், “புலியின் இடம் வனப்பகுதியில்… அது துபாயிலோ அல்லது வேறு எங்கும் செல்லப்பிராணியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று சீறுகிறார்.
வீடியோ “அபத்தமானது” என்று பலர் சொன்னாலும், “இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. இந்த விலங்குகள் செல்லப்பிராணிகள் அல்ல” என்ற கருத்தே பெரிதும் வலியுறுத்தப்படுகிறது.