7 ஆண்டுகளில்.. புதிய எதிர்காலத்தை நோக்கி இந்தியா: பிரதமர்!

இந்தியா சற்றுமுன்
pmmodi in un
pmmodi in un

இந்தியாவை, தனது சொந்த பலத்திலேயே உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில், 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7 பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

இந்த 7 பாதுகாப்பு நிறுவனங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று, நாட்டின் பாதுகாப்பு துறையில், முன் எப்போதும் இல்லாத வகையில், வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு அதிகம்.

சுதந்திரம் பெற்ற பின்னர், முதல்முறையாக முக்கிய சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, ஒற்றை சாளர அமைப்பு பின்பற்றப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.

‘சுயசார்பு இந்தியா’ கொள்கையின் கீழ், இந்தியாவை தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில், இந்த தீர்மானத்தையும், ‘மேக் இன் இந்தியா’ என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்றுள்ளது. புதிய எதிர்காலத்திற்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.