என்ன முயற்சி.. ஆனாலும் பெண்ணை கவர முடியவில்லை இந்த ஆண் இணையால்..!

அடடே... அப்படியா? சற்றுமுன்
peacock sct - 2026

இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஆனால், இங்கே இந்த ஆண் மயிலின் அழகான அசைவுகளை பெண் மயில் அசட்டை செய்கிறது. இந்த பெண்மயில் ஆண்கள் கவர்வதற்காக செய்யும் வேலைகளில் மயங்கக்கூடாது என்று ஆண்களின் கள்ளத்தனத்தை நன்கு அறிந்திருக்கிறது.

ஒரு வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதில் ஆண் மயில் ஒன்று பெண் மயிலை கவர தோகையை விரித்து, அசைத்து ஆடும்போது அதன் அழகான இறக்கைகள் கீழ்நோக்கி வளைகின்றன. அதன் இறகுகளோ சலசலவென்ற ஓசை எழுப்புகின்றன.

ஆனாலும் பெண் மயிலின் மனம் இறங்கவில்லை. அது ‘நோ’ என்றால் ‘நோ’ என்ற மன நிலைக்கு வந்து விட்டதோ என்னவோ. ஆண் மயில் எவ்வளவோ முயற்சித்தும் அதன் மனதை கவர முடியவில்லை. இத்தனைக்கும், அந்த ஆண் மயில் மிக அழகாக, அதன் முன் மண்டியிடுவது போல் பல முறை குனிந்து, தோகையை விரித்து ஆடுகிறது. ஆனாலும், அந்த பெண் மயிலின் மனம் கல்லானது ஏன் என புரியவில்லை.

மயில்களில் ஆண்மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். இதன் தோகையில் வரிசையாக இருக்கும் ‘கண்’ போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும்.

பெண் மயிலை கவர முதலில், ஆண் மயில் தனது நீண்ட தோகையை விரித்து, நளினமான நடனத்தை அரங்கேற்றும். பொதுவாக தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. ஆனால் அது இனிமையாக இருக்காது. ஆனாலும் அது பெண் மயில் மீதான ஆசையை தனது கூக்குரல் மூலம் உணர்த்தும்.

பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப்பெயர் பீபௌல் (Peafowl) என்பதாகும். ஆண் மயிலினை பீக்காக் (peacock) என்றும், பெண் மயிலினை பீஹென் (peahen) என்றும் அழைக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.