34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி- இனிய உதயம்! இந்த வருடமும் ‘அந்த’ பொங்கல் பரிசு!

Published:

kallakkurichi distric - 2026

தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரு கோட்டங்களை உள்ளடக்கியது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்கள் இதில் உள்ளன!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தைப்பொங்கல் திருநாள் அன்று அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கும்.. என்று அறிவித்தார்!

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் நிகழ்ச்சியில் வழங்கப் பட்டன.

Related articles

Recent articles

spot_img