ம் எழுந்து நட.. பிறந்த குட்டியை துரிதமாக்கும் தாய் யானை!

அடடே... அப்படியா? இந்தியா
elephant 1 2
elephant 1 2

யானைகள் மிகச்சிறந்த குடும்ப அமைப்பைக் கொண்டிருக்கும் விலங்குகள்.

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் யானைக்கு பிரசவம் என்றால் மற்ற பெண் யானைகள் அதற்கு பாதுகாப்பாய் இருக்கும். மேலும் குட்டி யானைகளை வளர்க்கும் பொறுப்பை அனைத்து யானைகளும் பங்கிட்டு செய்யும்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பிறந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத யானை எழுந்து நிற்க அதன் அம்மா உதவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

யானைகள் பெரும்பாலும் பிறந்து வெறும் 20 நிமிடங்களில் எழுந்து நிற்க பழகிவிடும். 1 மணி நேரத்தில் நடக்கவும் கற்றுக் கொள்ளும்.

இரண்டு நாட்களில் குழு உறுப்பினர்களுடன் இணைந்து உணவு தேடி பயணப்படும் வகையில் தகவமைப்பு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.