
ஒரு வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு ,அங்கிருந்த ஒரு பெண்ணையும் பலாத்காரம் செய்து விட்டனர் .
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் 26 வயதான பெண்ணொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .
இந்நிலையில் அந்த பெண்ணை தனியாக விட்டு விட்டு அவரின் பெற்றோர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியே சென்று விடுவார்கள் .
இதை அந்த பகுதியிலிருந்த கொள்ளையர்கள் சிலர் நோட்டமிட்டு வந்தனர். அதனால் அவ்ர்கள் அந்த வீட்டில் கடந்த புதன்கிழமை புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் பிற்பகல் 1 மணியளவில் வீட்டில் அந்த பெண்ணை மட்டும் தனியே விட்டுவிட்டு வெளியே சென்று விட்டனர். உடனே அங்கு ஒளிந்திருந்த கொள்ளையர்கள் அந்த வீட்டினுள் புகுந்து அந்த பெண்ணை ஒரு கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு அந்த வீட்டிலிருந்த 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அவர்கள் அனைவ்ரும் சேர்ந்து ஒருவர் மாறி ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது அந்த பெண் அலறிய சத்தம் கேட்டது. ஆனால் ஒருவரும் வீட்டினுள் அவரை காப்பாற்ற வரவில்லை.
பிறகு அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.