சாக்லேட் சுதந்திர தேவி சிலை! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
chocolate liberty Statue - 2026

சமீபமாக ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம், 7 அடி நீளமுள்ள சாக்லேட் சுதந்திர தேவி சிலை மற்றும் அதை உருவாக்கிய அமரி குய்சனைக் காட்டுகிறது.

அமரி குய்சன், பல்வேறு விதமான சாக்லேட்கள் பயன்படுத்தி ஏழு அடி நீளமுள்ள சுதந்திர தேவி சிலையை உருவாக்கியுள்ளார்.

இந்த சாக்லேட் சிலை, மிகவும் நேர்த்தியாக. உண்மையான சுதந்திர தேவி சிலையின் மினியேச்சரைக் கண் முன்னே நிறுத்துகிறது. அவ்வளவு நேர்த்தியாக, சாக்லேட்கள் கொண்டு சிலையை வடிவைமைக்கப்பட்டுள்ளது.

குய்சன் இந்த சாக்லேட் சிலையின் செய்முறையையும் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, அவர் சிலையின் அடிப்பகுதியை எப்படி உருவாக்கினார் என்பதிலிருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு பகுதியையும் எவ்வளவு கச்சிதமாக, துல்லியமாக செதுக்கி, வடிமைத்த விவரங்கள் வீடியோவில் உள்ளன.

ஜூலை 5 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவை இது வரை 4.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். கச்சிதமான வடிவமைப்புகளைப் கண்டு அசந்த நெட்டிசன்கள், பின்னூட்டங்களை வாரி வழங்கியுள்ளனர்.

மக்கள், ஸ்டேட்டன் தீவிலிருந்து ஒரு ஃபெர்ரியை புக் செய்து கொண்டு, குய்சனின் இந்த சாக்லேட் சுதந்திர தேவி சிலையை காண வரவேண்டும் என்று உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பலரும், தங்கள் பாராட்டை எமொஜிக்கள் பகிர்வது மூலம், ஹார்ட் எமோஜிக்களை வழங்குவது மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

‘எவ்வளவு நேர்த்தியான சாக்லேட் சிலை! நம்பவே முடியவில்லை’ என்று ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு இன்ஸ்டாகிராம் யூசர்.

‘நான் ஒரு ஃபெர்ரியை எடுத்துக்கொண்டு, ஸ்டேடன் தீவுக்கு இதைப் பார்ப்பதற்கு வரலாமா’ என்று ஒரு இன்ஸ்டாகிராம் யூசர் தெரிவித்துள்ளார்.

‘சாக்லேட்டில் இப்படியா… நம்பவே முடியவில்லை!’ என்று மற்றொரு இன்ஸ்டாகிராம் யூசர் பின்னூட்டம் அளித்துள்ளார்.

‘அற்புதம், இதற்கு நிகரே இல்லை’ என்று கூறியுள்ளார் இன்னொரு யூசர்.
‘நீங்கள் அற்புதமான கலைஞர்! இது உணவு மட்டுமல்ல..’ என்று மற்றொரு யூசர் தன் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.