பொதுமேடையில் அசடுவழிந்த ஜோக்கர்கள்! துபையில் ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்!

stalin village meet - 2026

பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில் இரு நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். அங்கே சிறுமி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அசடுவழிந்து நின்றிருக்கிறார்.

தேசிய அளவில் வாரிசு என்ற காரணத்தால் பதவிக்கு வந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு,ம் மாநில அளவில் தலைவரின் வாரிசு என்பதால் கட்சித் தலைவராகிவிட்ட மு.க.ஸ்டாலின் முட்டுக்கொடுத்து வருகிறார். ஆனால் இவர்கள் இருவருமே, பொதுமக்கள் மத்தியில் சூழலைக் கையாளத் தெரியாமல் கேவலப்பட்டு நிற்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நமக்கு நாமே பயணம் என்ற பெயரில் திமுகவின் கொள்கைகளையும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வோம் என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அப்போது, ஸ்டாலின் போட்ட வேடங்கள், சைக்கிளில் செல்வதும், ஆட்டோவில் கை அசைப்பதும் என கேலிக்கூத்தாக நிறைந்திருந்தன காட்சிகள்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு, கிராமசபைக் கூட்டம் :என்பதை நடத்தி வருகிறார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் கிராமம் தோறும் மக்களை சந்திக்க திட்டமிட்டு தந்தையி தொகுதியான திருவாரூரில் தொடங்கினார்.

கிராமசபைக் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஸ்டாலின் அப்போதே பதில் அளிக்கிறார். அவர்கள் கூறும் குறைகளை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தக் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப் படும் என்று வாக்குறுதியையும் அளிக்கிறார் ஸ்டாலின்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் இள்ளலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் ஸ்டாலினிடம் கேட்ட கேள்வி ஸ்டாலினை வாய்மூடி மௌனியாக்க வைத்துள்ளது.

அந்த இளைஞர் ஸ்டாலினிடம், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நீங்கள் ஆளும்கட்சிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் கௌசல்யா திருமணம் செய்ததிற்கு அடுத்த நிமிடமே வாழ்த்து சொன்ன உங்களால் நிச்சயம் பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியும்! ஆனால் நீங்கள் இன்று வரை பொன் மாணிக்கவேல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது மனதிற்கு வருத்தத்தை தருகிறது என்றார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இளைஞரின் கேள்விக்கு பதில் அளிக்காமல், மௌனமாக குறிப்பு மட்டும் எடுத்துக் கொண்டு, நடையைக் கட்டினார் ஸ்டாலின்!

காரணம், கேவில்களை கொள்ளையர்களின் கூடாரம் என்று கூறிக் கொண்டே, கொள்ளையடிப்பவர்கள் யார் என்பது ஸ்டாலினின் மனசாட்சிக்குத் தெரியாமலா இருக்கும்!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories