லெனோவா டேப் 6 5ஜி.. அசத்தும் அம்சங்கள்!

Published:

lenovo
lenovo

லெனோவா நிறுவனம் ஜப்பானில் புதிய லெனோவா டேப் 6 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த டேப்லெட் மாடல் அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா டேப் 6 5ஜி மாடல் ஆனது 10.3-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,200×1,920 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது

இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 690 5ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் அருமையாக பயன்படும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சிப்செட் மிக வேகமாக பயன்படும்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

lenovo tab
lenovo tab

அதேபோல் பல்வேறு அசத்தலான கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Abyss Blue மற்றும் Moon White நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய டேப்லெட்.

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 7500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ப்ளூடூத் வி5.1, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இந்த அட்டகாசமான லெனோவா டேப் 6 5ஜி மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட் வசதியுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த லெனோவா டேப் 6 5ஜி மாடல்.

Related articles

Recent articles

spot_img