கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

- 2026

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் சுமார் 1000 பேரை அழைத்துக் கொண்டு புனேவுக்கே போகிறது சிறப்பு ரயில். இதனால் இழப்பு தமிழகத்துக்கே என்றும், மத்திய ரயில்வே துறைக்குதான் லாபம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்தன.
அதன் ஒரு பகுதியாக, போராட்டத்துக்கு வரும் இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் என்று கூறி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றன. இதனால், சென்னையில் நடைபெற திட்டமிட்ட போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.

அதில், சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டி, புனேவுக்குத் இடமாற்றம் செய்யப்பட்டது. வரும் 20ஆம் தேதி சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புனேவில் நடைபெறுகிறது.

- 2026

ஆனால், இந்தப் போட்டிகளைக் காண வாய்ப்பில்லாத நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே, சிஎஸ்கே ஃபேன்ஸ் கிளப் என்றொரு அமைப்பின் மூலமாக சிஎஸ்கே நிர்வாகத்துக்கு கோரிக்கை ஒன்று வைத்தது. சென்னை ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், சலுகை விலையில் ரயில் அல்லது விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தருமாறு கோரியது. அல்லது ஆட்டத்துக்கான டிக்கெட் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தது. இதை பரிசீலித்த சிஎஸ்கே அணி நிர்வாகம், இது குறித்து யோசித்தது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே ஆட்டங்களைக் காண முடியாத ரசிகர்களுக்கு புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

ரயிலில் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கித் தந்தாலே போதும் என்று கேட்ட நிலையில், ஒரு ரயிலையே ஏற்பாடு செய்துவிட்டது. இதையடுத்து தோனியின் தீவிர ரசிகரான சரவணன், பிரபு ஆகியோர் புனே செல்லக்கூடிய சிஎஸ்கே ரசிகர்களைத் தேர்வு செய்துள்ளார்கள். நாளை புனேவில் சென்னை – ராஜஸ்தான் ஐபிஎல் ஆட்டம் நடைபெறவுள்ளது.

- 2026

இந்த ஆட்டம் முடிந்த பிறகு அதே சிறப்பு ரயிலில் அனைவரும் அடுத்த நாள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் புனேவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்குவதற்கும் அவர்களுடைய உணவுச் செலவுக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பயணம் குறித்த புகைப்படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories