
புதுச்சேரியில், காங்கிரஸாரின் அராஜகப் போக்கு தொடர்கிறது. அதன் ஒரு வெளிப்பாடாக, புதுவை சட்ட மன்றத்துக்கு தேர்வான நியமன எம்எல்ஏ கார் கண்ணாடி உடைக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கரின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் குறித்து நியமன எம்எல்ஏ சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



