இந்தியாவில் திடீரென அமைதியின்மையும் கலவரங்களும் ஏற்பட்டு வரும் சூழலில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா தொடர்பில் அமெரிக்கா தொடங்கி, பல்வேறு இடங்களில் குழப்பங்களையும் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தையும் ஏற்படுத்த, நடவடிக்கைகளை மேற்கொண்டது தெரியவந்தது. இது குறித்த விழிப்புணர்வு இப்போது பெருகியிருக்கிறது.
குஜராத் தேர்தல், கர்நாடக தேர்தல், வரும் 2019 தேர்தல் இவற்றில் காங்கிரஸுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு, திட்டங்களை வகுத்துக் கொடுப்பதாகப் பேசப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் இருப்பதையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்நிலையில், தமிழகத்தில் காவிரி பிரச்னை, கர்நாடகத்தில் லிங்காயத் பிரச்னை, குஜராத்தில் தலித் பிரச்னை என்று பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி, நாட்டைப் பிளவுபடுத்துவதே அதன் வேலை என்று குற்றம் சாட்டுகின்றனர் அறிஞர்கள் பலர். அவர்களில் ஒருவரின் டிவீட்டர் பதிவு இது…
கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவுடன் காங்கிரஸ் போட்டிருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்து புரொஃபசர் வைத்யா ட்வீட்டரில் தன் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
புரொஃபசர் வைத்யா ட்வீட் உண்மையென்றால், 2019 மே தேர்தலுக்குள் நாடும் மக்களும் பெரும் திண்டாட்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்!
காங்கிரஸ்காரர்கள் எவரும் செய்த ஊழல்களுக்காக இது வரை தண்டிக்கப் பட வில்லை. ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் ஒரு முறை மோடி வந்தால் தண்டிக்கப்படுவோம், தப்ப முடியாது என்பதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள்.
1) வடக்கு – தெற்கு பிரிவினை உண்டாக்குவது.
2) தலித் – தலித் அல்லாதவர்கள் என பிரிவினை ஏற்படுத்துவது.
3) மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் இதர பிரிவினரையும் கலவரம் செய்ய தூண்டுவது.
4) நாட்டில் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது.
5) முற்போக்குகள் – லிபரல்கள் – இடதுசாரிகள் – ஊடகங்கள் – பாலிவுட் ஆகியவற்றை கொண்டு பெண்கள் மனதில் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குவது.
6) பங்காரு லக்ஷ்மணனை ஸ்டிங் செய்து வீழ்த்தியது போல மேலும் பல பாஜக ஆட்களை ஸ்டிங் செய்வது.
7) 2019க்குள் எந்த முக்கியமான வழக்கும் முடியாமல் / தீர்ப்பாகாமல் பார்த்துக் கொள்வது.
8) நீதித்துறையில் குழப்பம் உண்டாக்குவது.
9) குறைந்தது 500 நிருபர்களுக்கு மாதம் 3 – 4 லட்சம் கொடுப்பது (பொய் செய்தி / வதந்தி பரப்ப)
10) உதிரி (ரவுடி) குழுக்களை கொண்டு கலவரம் செய்வது, தாஜ்மஹால் போன்றவற்றை சேதம் செய்வது.
11) ஐ.நா மூலம் இந்தியாவை கடிந்து கொள்ள செய்வது. ஜாதி பிரச்சினைகளை கொண்டு ஐ.நா பொருளாதார தடை விதிக்க வைப்பது.
12) (பாஜக-வை விட) காங்கிரஸ் நன்றாக ஆட்சி செய்தது என்ற கோணத்தில் மக்களை சிந்திக்க செய்வது (போலி செய்தி, கலவரம், அமைதியின்மை)
Cong CA inputs: 7) See nocase concluded by 2019 -8) Create chaos in judiciary in states 9) Pay3/4 L month for say 500 journos 10) create right fringe groups to damage say Taj etc 11) get UN censure /eco blockade on for caste/race 12)/mke ppl thinkCong is better in L&O:))2/2RT
— RVAIDYA2000 (@rvaidya2000) April 18, 2018




