தென்னிந்திய நிறுவனங்கள் உச்சம் தொட்டு சரிவைச் சந்திப்பது எதனால்?!

இந்தியா கட்டுரைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

vgsidhartha - 2026

நீங்கள் ஒன்று கவனித்தீர்களா..? தெற்கில் தொடங்கப்படும் நிறைய கம்பெனிகளும், மிக வெற்றிகரமாய்.. சிகரம் தொட்டவுடன், சரேலென கீழே விழுந்து மொத்தமாய் நொறுங்கி விடுகிறது.. அல்லது வேறு கம்பனி டேக் ஓவர் செய்துவிடுவதை..

சத்யம், ஏர்செல், க்ளோபல் ட்ரஸ்ட் பேங்க், NEPC-MICON , சுபிக்‌ஷா… வரிசையில்…  இன்று காஃபி டே..

காஃபி டே விழவில்லை.. ஆனால் அதன் தலைவர் சித்தார்த்தா மங்களூருவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாய் சந்தேகப்பட முகாந்திரம் இருக்கிறது. SM கிருஷ்ணா போன்ற ப தி கொ போட்ட ஒரு அரசியல்வாதியின் மாப்பிள்ளை. Well connected. மிகவும் வெற்றிகரமாய் நடந்து கொண்டிருக்கும் கம்பெனியின் தலைவர் ஏன்.. எங்கேயோ போகிறேன் என்று சொல்லிவிட்டு தற்கொலை செய்ய தண்ணீரில் குதிக்க வேண்டும்..?

விஷயத்திற்கு வருவோம்.. சுமார் 37 வருடத்திற்கு முன் முதல் கடை ப்ரிகேட் ரோடில் ஆரம்பித்த காஃபி டே இன்று அசுரத்தனமாய் வளர்ந்து விட்டது. ஏன்.. நானே கூட.. கண்ணன் ஜூபிலி காஃபி, நியோ கண்ணன் காஃபி எல்லாம் சுற்றி காஃபி டே பீபரியில் செட்டில் ஆகி இருபது வருடத்திற்கு மேலாகி விட்டது. என்னைப்போல் பலருமே.. காஃபி கம்பெனி ஒரு ப்ரொபஷனல் மேனேஜ்மென்டின் கீழ் இயங்கி வந்தாலும்.. மூன்று கோணங்கள் இப்போது வெளி வருகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

siddhartha1 - 2026முதலில்.. இந்த கம்பெனியில் சில ப்ரைவேட் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள்.. போதும் உன் கம்பெனி ஷேரை நீ திருப்பி வாங்கிக்கொள் என்று நெருக்குவதாலேயே, ஒரு கட்டத்தில் முடியாமல் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த ப்ரைவேட் முதலீட்டாளர்களின் பங்கை, வெளியில் கடன் வாங்கி, கம்பெனி வாங்கிக்கொண்டதில் வட்டி நஷ்டம் என்று ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கம்பெனிகள்..
1.NLS Mauritius
2.KKR Mauritius
3. Marina West Singapore
4. Marina I ii Singapore.. இவர்கள் மொத்தம் 25 சத பங்கை வைத்திருக் கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நம்ம ஊர் ஆசாமிகள்.. சிவாஜி மீசை வைத்து, மரு வைத்த இரட்டை வேடம் போட்டிருக்க வாய்ப்பு நிறைய இருக்கிறது. அமித் ஷாவிடம் விஷயம் போயாகிவிட்டது.

இரண்டு.. சித்தார்த்தா பல லட்சம் பேரை காஃபி குடிக்க வைத்து.. ஒரு புதிய ப்ராண்டை உருவாக்கியிருக்கும் இந்த முயற்சி லேசானதல்ல.. மிகவும் சிறப்பானது.. ஆனால்.. இதன் காரணம் 6,000 கோடிக்கும் அதிகமான ஆபரேஷனல் நஷ்டம்.. அதாவது பொருள் விற்றாலே.. அதன் வருமானம் தாண்டிய சிலவுகள் என்கிற ஒரு கட்டத்தில்.. கோகா கோலாவிடம் பேச்சு நடந்து கொண்டிருந்தது. இது மிகவும் அட்வான்ஸ்ட் ஆக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி நடந்தது துயரமான விஷயம்தான்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

மூன்று.. கொஞ்சம் 2017க்கு போனால்.. இந்த காஃபி டே.. மைன்ட் ட்ரீ என்கிற கம்பெனியில் செய்த முதலீடை, எல் அன்டீக்கு விற்க.. அவர்கள் இதை வைத்துக்கொண்டு மைன்ட் டீரியை Hostile Take over.. செய்ய முற்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக சித்தார்த்தாவின் வீட்டில் 650 கோடி கணக்கிலில்லாத பணம் சிக்கியது என்றாலுமே.. Ex-DG IT ஒருவர் சித்தார்த்தாவை மிகவும் வறுத்தெடுத்ததே காரணம் என்றும் இன்னொரு செய்தி உலவுகிறது. இதனால் மைன்ட் ட்ரி டீல் முடியாமல் இழுத்தடிக்க எல்லா பங்குகளையும் அட்டாச் பண்ணியது என்று இப்படி பல விஷயங்கள் இவரை படுத்தியது.

முக்கியமாய் 1993 இல் இன்ஃபோஸிஸ் பப்ளிக் இஷ்யூ ஒரு மாதிரி தோற்கிற மாதிரியான சமயத்தில்.. இவர் ப்ரைவேட்டாய் இதில் முதலீடு செய்து காப்பாற்றினார். இன்று அதே ப்ரைவேட் ஈக்விடி கம்பெனிகள்.. இவர் முதுகில் குத்தியதில்…

எங்கேயோ போக வேண்டியவர்.. மங்களூரு போய் நேத்ராவதி பாலத்தில்..காரை முன்னால் போய் நிறுத்து என்று டரைவரிடம் சொல்லிவிட்டு.. கடைசியாய் யாரிடமோ சாரி சொல்லிவிட்டு.. காணாமல் போனார்..

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

தற்கொலை செய்து கொள்ள மிக மிக அதிகமான தைரியம் வேண்டும்.. அதற்கான காரணம் கோழைத்தனமாக இருந்தாலுமே..

சாரி சித்தார்த்தா மிஸ் யூ மேன்.

கட்டுரை: – பிரகாஷ் ராமசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.