டி20 உலகக் கோப்பை போட்டி 2021..!

உலகம் விளையாட்டு
icc t20 world cup
icc t20 world cup

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டி20 உலகக் கோப்பை போட்டி 2021: சூப்பர் 12 ஆட்டங்கள் சனிக்கிழமை இன்று தொடங்குகின்றன..

23.10.2021 முதல் 2021ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 லெவல் ஆட்டங்ககள் தொடங்குகின்றன. சூப்பர் 12 போட்டிகளுக்கு எட்டு அணிகள் முன்னரே தங்களது டி20 ஆட்டங்களின் வெற்றி-தோவிகளின் அடிப்படையில் தேர்வாகிவிட்டன.

மீதமுள்ள நாங்கு அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் ஆட்டங்களும், பயிற்சி ஆட்டங்களும் இதுவரை நடந்தன. தகுதிச் சுற்று ஆட்டங்களில் எட்டு அணிகள் பங்குபெற்றன. அவை குரூப் ஏ, குரூப் பி எனப் பிரிக்கப்பட்டிருந்தன.

குரூப் ஏவில் இலங்கை, நமீபியா, அயர்லாந்து, நெதெர்லாந்து ஆகிய அணிகள் இருந்தன. இவற்றுள் இலங்கையும் நமீபியாவும் தகுதிபெற்றுள்ளன. குரூப் பியில் ஸ்காட்லாந்தும் பங்களாதேஷும் தகுதிபெற்றுள்ளன.

இப்போது இந்த 12 அணிகளும் சூப்பர் 12 போட்டிகளுக்காக குரூப் 1, குரூப் 2 என பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 அணிகள்: ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத்தீவுகள். குரூப் 2 அணிகள்: ஆப்கானிஸ்தான், இந்தியா, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து. நாளை குரூப் 1இல் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

மாலை 0330 மணிக்கு அபுதாபியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான ஆட்டம். இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளௌக்கிடையே 1930 மணிக்கு துபாயில் நடைபெறும்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1530 மணிக்கு ஷார்ஜாவிலும், பெருதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் 1930 மணிக்கு துபாயிலும் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.