dosa - 2026

அட பாருங்களேன் பாமரன் வாங்கினா பல்லியும் பூரானும்..! நடிகை வாங்கிய தோசை மாவில் தங்க மூக்குத்தி!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
dosa - 2026

நடிகை வாங்கிய தோசை மாவுக்குள் மூக்குத்தி இருந்ததால், நடிகை அதிர்ச்சி அடைந்தார்.
பிரபல மலையாள சின்னத்திரை நடிகை சூர்யதாரா.

மலையாளத்தில் பல தொடர்களில் நடித்துள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எலூர் பகுதியில் வசிக்கும் அவர், கடந்த செவ்வாய்க்கிழமை, வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இருந்து தோசை மாவு பாக்கெட் ஒன்றை வாங்கினார்.

வீட்டுக்கு வந்த பின், மாவை பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கிவிட்டு, தோசை சுட்டார். நான்கைந்து தோசைகளை சுட்ட பின், அதை தனியாக ஒரு தட்டில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தோசையில் தங்கம் மின்னியது தெரியவந்தது.

‘தோசைக்குள்ள இது எப்படி வந்தது?’ என்று நினைத்த நடிகை, அவர் அம்மாவை அழைத்துக் காண்பித்தார். அவருக்கும் ஆச்சரியம்.

தோசைக்குள் இருக்கும் மூக்குத்தியை செல்போனில் புகைப்படம் எடுத்த அவர், அதை தனியாக வைத்துவிட்டு சாப்பிடத் தொடங்கினார். பிறகு இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் சொல்ல, தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

mukuthi - 2026

இதுபற்றி நடிகை சூர்யதாரா கூறும்போது, “பிரபலமான நிறுவனத்தின் தோசை மாவைத்தான் வாங்கினேன். தோசையை சுடும்போது நான் கவனிக்கவில்லை.

இந்த மூக்குத்தி, பேக்கிங் செய்யும்போது தவறுதலாக விழுந்திருக்கலாம்” என்றார். நடிகையின் தாய் கூறும்போது, ”கவனிக்காமல் குழந்தைகளோ, நாங்களோ சாப்பிட்டிருந்தால், பெரிய சிக்கலை கொண்டு வந்திருக்கும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.