images 2023 03 05T085805716 - 2026

ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..

சற்றுமுன்
images 2023 03 05T085805716 - 2026
#image_title

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம் விலை கடந்த 60 நாளில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ள காரணத்தால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் சிறுக சிறுக சேமித்த பணத்தை பெருமளவில் தங்கத்தை நீண்ட கால முதலீடாக செய்வது வழக்கம்.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.20 உயர்ந்தது 5,665-க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 50 காசுகள் சரிந்து 77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.