அத்திவரதரை தரிசித்து… திரும்பிய நிலையில்… பிரபல பெண் எழுத்தாளர் மாரடைப்பால் மரணம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

teluguwriter - 2026

பிரபல தெலுங்கு எழுத்தாளர் கவிஞர் பத்திரிகையாளர் டாக்டர் கே.பி.லட்சுமி நேற்று இரவு ரயிலில் காலமானார். அத்திவரதரை தரிசித்து விட்டு வரும் வழியில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப் படுகிறது.

மூத்த பத்திரிக்கையாளர் பிரபல எழுத்தாளர் டாக்டர் லக்ஷ்மி (70) திங்கள்கிழமை இரவு காலமானார். ஹைதராபாதிலிருந்து 50 பேர் ஒரு குழுவாக காஞ்சி அத்திவரதரை தரிசிக்கச் சென்றனர். தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் திங்கள் இரவு அரக்கோணம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹைதராபாத் கிளம்பினர்.

திங்கள் இரவு 8 மணி அளவில் ரயில் ரேணிகுண்டாவை நெருங்கியபோது லக்ஷ்மிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே ரயிலிலிருந்து இறங்கி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார். ஆனால் பரிதாபமாக  வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் அவர் உடலை ஹைதராபாதுக்கு எடுத்து வந்தனர்.

ஹைதராபாத் காச்சிகுடாவைச் சேர்ந்த டாக்டர் கேபி லக்ஷ்மி மூத்த பத்திரிக்கையாளர், ரேடியோ பேச்சாளர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் என்று பல்முகத் திறமையாளராக பெயர் பெற்றவர். ஈநாடு குழுமத்தைச் சேர்ந்த விபுல, சதுர பத்திரிகைகளில் ஆசிரியராக தன் பணியை தொடங்கினார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மனசுன மனசு, ஜுகாமல்லி சிறுகதை தொகுப்புகளை வெளியிட் டுள்ளார். வீக்ஷணம், கமனம் என்ற கவிதைத் தொகுப்புகள் அவரை நல்ல கவிஞராக அறிமுகப்படுத்தின. 2003இல் ஆந்திர மாநில அரசு அவருக்கு சிறந்த எழுத்தாளர் விருது அளித்து கௌரவித்தது.

மிகவும் உற்சாகமானவராகவும் சிரித்த முகத்துடன் விளங்கிய டாக்டர் கேபி லட்சுமிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் மரணத்திற்கு இலக்கிய அன்பர்கள் அரசியல் பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.