‘முத்தலாக்’ தடுப்பு மசோதா நிறைவேற்றம்…! இந்தியா மகிழ்வதாக மோடி கருத்து!

Published:

triple talaq - 2026

முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக, கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன. இதை அடுத்து, இந்தச் சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும்.

முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதா இப்போது நிறைவேற்றப் பட்டுள்ளது குறித்து அரசியல் கட்சியினர் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து நாடே மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்றுக் கொள்ள முடியாத ஆதிகாலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது. முத்தலாக்கை நாடாளுமன்றம் ரத்து செய்ததுடன், முஸ்லிம் பெண்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட தவறு சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா சமூக நீதிக்கான வெற்றி. சமூகத்தில் சமநிலையை மேலும் பலப்படுத்தும்! இந்தியா இன்று மகிழ்ச்சி அடைகிறது!


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முஸ்லிம் பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019 ஐ நிறைவேற்ற ஆதரித்த அனைத்து கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் மனத்தில் மிகச் சிறந்த நேரத்தில் உயர்ந்துள்ளனர். அவர்களுடைய இந்த நடவடிக்கை இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நினைவில் இருக்கும்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

முத்தலாக் ஒழிக்கப்படுவது பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு உதவும். பெண்களுக்கு நமது சமூகத்தில் அவர்களுக்குத் தகுதியான கண்ணியத்தை அளிக்கும். முன்னதாக மக்களவை நிறைவேற்றிய #முத்தலாக் மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றிய இந்நாள் வரலாற்றில் சிறந்த நாள்! @narendramodi

முஸ்லீம் பெண்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளோம். இனி தலாக்-தலாக்-தலாக் இல்லை!
– என்று கூறியிருக்கிறார்.

அதுபோல், முத்தலாக் தடைச்சட்ட மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.


முத்தலாக் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், மசோதா நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த மசோதா சமூக நீதிக்கு ஒரு மைல் கல். நாடே திருப்தியடைந்த தருணம் இது.. என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து தெரிவித்துள்ள கருத்தில், இந்நாள் ஜனநாயகத்தின் சிறந்த நாள். பிரதமரின் உறுதிப்பாட்டுடன் இம் மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்துகிறேன். இச்சட்டம் முஸ்லிம் பெண்களை பிற்போக்குத்தனமான நடைமுறை சாபத்தில் இருந்து விடுவிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதாவை ஆதரித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து கருத்து தெரிவித்த போது, இன்று ஒரு வரலாற்று சாதனை நாள் இரு அவைகளும் முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கி உள்ளன என்றார்!

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img