சுமந்த் சி.ராமன் பொய் சொல்கிறார்..! மைத்ரேயன் பதில்..!

Published:

sumanth c raman maithreyan - 2026

இன்று இரவு நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்விநேரம் நிகழ்ச்சியில் முத்தலாக் மசோதா பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போது அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான தகவலைக் கூறினார். National Judicial Appointments Commission Bill 2014 ல் அஇஅதிமுக மக்களவையில் எதிர்த்து வாக்களித்தது. 14/08/2014 அன்று மாநிலங்களவையில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக நான் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் அதன் காரணமாகவே அம்மா அவர்கள் எனது பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் என்றும் சுமந்த் சி ராமன் கூறினார்.

அது தவறான கூற்று என்பதை சுட்டிக்காட்ட 14/08/2014 அன்று காலை நான் அம்மா அவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தை பதிவு செய்துள்ளேன். எனது கடிதத்தை அம்மா அவர்கள் படித்து நிலைமையை நன்கு உணர்ந்து உடனடியாக எனக்கு பதில் அளித்தார். அன்றைய முதல்வர் அலுவலக உதவியாளர் சூர்யநாராயணன் கைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட அம்மா அவர்களின் செயலாளர் ராமலிங்கம் அவர்கள் அம்மா அவர்கள் மாநிலங்களவையில் கழக எம் பிக்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கட்டும் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறினார்.
அம்மா அவர்களின் உத்தரவையொட்டி தான் அன்று கழக உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த வரலாற்று உண்மையை சுமந்த் சி ராமன் அவர்களும் மற்ற அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்கு தான் இந்த பதிவு.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

எனது பொறுப்புகள் நீக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்கள். எனது விசுவாசம் அம்மா அவர்களுக்குத் தானேயொழிய வேறு யாருக்கும் அல்ல.

  • வா.மைத்ரேயன் (அதிமுக., முன்னாள் எம்.பி.,)

Related articles

Recent articles

spot_img