poora rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: போப்ரா ரைஸ்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
poora rice - 2026

போப்ரா ரைஸ்
தேவையான பொருட்கள்
சாதம் – 3 கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
முந்திரி – 10
பூண்டு – ஒரு பல்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
பரங்கிக்காய் – 2 கீற்று
கறிவேப்பில்லை – ஒரு கொத்து

செய்முறை
வெங்காயம், பூண்டு இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பரங்கிக்காயை தோல் சீவி விட்டு துருவலாக துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், முந்திரி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை இவைகளை போட்டு சிவக்க வதக்கவும்.
பின் பரங்கிக்காய் துருவல் போட்டு அதில் உள்ள ஈரப்பதம் வற்றியவுடன் அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும்.
2 நிமிடத்திற்கு பின் இறக்கி சூட்டோடு ஆறிய சாதத்தில் கலந்து விடவும். கடைசியில் நெய் ஊற்றி நன்கு கிளறிவிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.